Subscribe

BREAKING NEWS

14 December 2017

வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் - AVM அன்னதான அறிவிப்பு


அன்பர்களே..

இதோ.. ஆண்டின் முடிவில் நிற்கின்றோம். இப்போது தான் 2017 ம் ஆண்டு ஆரம்பித்தது போல் இருந்தது. ஆனால் 12 ஆவது மாதம் முடிந்து 2018ம் ஆண்டை வரவேற்க நாம் தயாராக இருக்கின்றோம். தமிழ்ப் புத்தாண்டா? ஆங்கில புத்தாண்டா? என்று பட்டிமன்றம் வேறு ஆரம்பித்து விடுவார்கள். அதை சற்று ஓரங்கட்டி விடுவோம். இந்த ஓராண்டில் நாம் என்னசெய்தோம் என்று சிந்தித்துப் பாருங்கள்.

நம்மைப் பொறுத்தவரை, 2017 ம்  ஆண்டு சில வலிகளையும் கொடுத்தது. சில இழப்புக்கள். அதே போல் சில புதிய முயற்சிகள் - இதோ ..நம் "தேடல் உள்ள தேனீக்களாய் " என்ற தலமே ஒரு சான்று. தளத்தின் வாயிலாக புது புது உறவுகள், பற்பல சேவைகள் என தொடர்ந்து கொண்டிருக்கின்றோம்.உழவாரப் பணி, ஆலய வழிபாடு, சத்சங்கங்கள் ஏற்பாடு, ஆன்மிக யாத்திரை - ஓதிமலை & சதுரகிரி , அன்னதானம் என பட்டியல் நீண்டுகொண்டே செல்லுகின்றது. இதில் திருஅண்ணாமலையார் பௌர்ணமி கிரிவலம். சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பித்தோம். இந்த மாதத்தோடு ஓராண்டு கிரிவலம் நிறைவு பெறுகின்றது. இடையில் சில மாதங்கள் விடு பட்டிருக்கும், ஆனால் கிரிவலம் தந்த அனுபவமோ வேறு. அதனை எதிர்வரும் பதிவுகளில் காணலாம்.

நம் தேடல் உள்ள தேனீக்களாய் என்ற குழு எப்படி ஆரம்பித்தோம் என்று திரும்பிப் பார்க்கின்றோம். முதன் முதலாக நம் அலுவலக நண்பர்கள் உதவியோடு அன்னதானம் செய்தோம்.இது தான் நம் தளத்தின் பிள்ளையார் சுழி. உடலால் உழவாரப் பணியும், மனதளவில் அண்ணா சேவையும் செய்வதே நம் தளத்தின் குறிக்கோள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இன்றைய பதிவில் அன்னதான அறிவிப்பு செய்ய உள்ளோம். அன்பர்கள் தங்களால் இயன்ற உதவி செய்யும் படி கேட்டுக் கொள்கின்றோம்.

சென்ற மாத அன்னதானம் -  நல்ல அனுபவம் ..தற்போது வழக்கமான இடத்தில நாம் நம் அன்பர்களை தேட ஆரம்பித்து விட்டோம். சென்ற அன்னதானம் வேளச்சேரியில் ஆரம்பித்து அப்படியே திருவான்மியூர் வழியாக சென்று, இறுதியில் கூடுவாஞ்சேரியில் வந்து நாம் சுமார் 10 உணவுப் பொட்டலங்களை கொடுத்து நிறைவு செய்தோம். மருந்தீஸ்வரர் கோயில், பாம்பன் சுவாமிகள் ஆலயம் என சென்றோம், வழக்கம் போல் திருமதி பரிமளம் மற்றும் செல்வி. சௌமியா அவர்கள் நம்மோடு இணைந்து சேவையில் ஈடுபட்டார்கள். நிகழ்வின் துளிகளை இங்கு காட்சிப் படங்களாக தர இயலவில்லை.

சென்ற அன்னதானத்தில், உணவோடு, ஆடை தானம் செய்தோம். அதை பார்த்து விட்டு மற்றொருவர் ஆடை கேட்டார். ஆடை தானத்தில் உதவிய திருமதி.பரிமளம் அவர்களுக்கு நம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். உபயோகம் செய்யாத ஏதேனும் துணிகள், உடைகள் இருந்தால் நம்மிடம் சேர்க்கலாம். கிழிந்த கந்தல் வேண்டாம், உதவும் வகையில் இருந்தால் கொடுக்கவும், நாம் அன்னதானம் செய்யும் போது, தேவை அறிந்து கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

அன்னதானம் செய்யும் போது நாம் எப்படி செய்கின்றோம் என்பது தான் முக்கியம். ஏதோ உணவை அளித்தோம் என்று ஏனோ, தானே என்று செய்யாமல் அன்பை வாரிக் கொண்டு உணவைப் பரிமாற வேண்டும். இங்கே நாம் அன்பைத் தான் விதைக்கின்றோம், உணவின் வழியே அன்பு என்று புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ சடங்காக செய்யக் கூடாது. அன்னதானம் என்பது சாதாரணம் அன்று, இதனை நாம் செய்ய புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

இந்த உடல் அன்னமய கோஷம்  எனப்படுகிறது.  நாம் பிறந்தது முதல் தற்போது வரை இந்த உடல், இப்படி ஒரு உருவம் பெற்றுள்ளது.இது எப்படி? அன்னத்தால் தானே. எனவே, நீங்கள் உணவு அளிப்பதன் மூலம் ஒருவருக்கு உடலையே கொடுக்கிறீர்கள். மிகுந்த பக்தியுடனும், அன்புடனும், ஈடுபாட்டுடனும் ஒருவருக்கு நீங்கள் உணவு பரிமாறும்போது, அந்த அடுத்த உயிருடன் உங்களுக்கு ஒரு ஆழமான தொடர்பு ஏற்படுகிறது. அதை பக்தியுடன் கொடுப்பதும் ஏன் முக்கியம் என்றால், உங்களிடமிருந்து பெறுபவர், கொடுப்பதற்கான வாய்ப்பை உங்களுக்கு அளிக்கிறார். இது சாதாரண விஷயமல்ல.

இங்கே நாம் அன்னத்தை கொடுக்கவில்லை. ஒருவருக்கு உயிரைக் கொடுக்கின்றோம். இதைத்தான் மணிமேகலையில்,

ஆற்றுனர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)

ஒவ்வொரு அன்னதானமும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நாம் திட்டமிட்டு செய்வதில்லை, அவன் கைகளில் கொடுத்து விட்டோம், அவரின்றி நாம் எது?

அன்னதானம் போட்டால் ஊரில் தண்டச் சோறும், வேலையசெய்யாத சோம்பேறிகளும் பெருகுவர் என்று பலர் நினைப்பர். ஆயிரம் உதாவக்கரைகள் சாப்பிட் டாலும் அதிலொரு நல்லவர் இருந்து வாழ்த்தினால் அன்னதானம் செய்த குடும்பம் மட்டுமின்றி ஊரே வாழும். “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” — என்பது தமிழர் கண்ட உண்மை. நாம் அன்னதானம் செய்யும் போது,தேவையுள்ளவர்களுக்குத் தான் செய்கின்றோம்,


 தானங்களும், பலன்களும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. என்ன தானம், கழியும் வினை, அதனுடைய பலன்கள் என்ற வரிசையில் படிக்கவும்.

அன்ன தானம் - பூர்வ ஜென்ம கர்ம வினைகள் - பித்ருக்கள் ஆசி 

ஆடை தானம் - தகாத உறவுக்குற்றங்கள்  - கற்பிற்கு ரட்சை 

காலணி - பெரியோர்களை நிந்தித்த பாவம் - தீர்த்த யாத்திரை பலன்கள் 

மாங்கல்யச் சரடு - காமக்குற்றங்கள் - தீர்க்க மாங்கல்ய பாக்கியம் 

குடை - தவறான வழியில் சேர்த்த செல்வம் - குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் 

பாய் - பெற்றோர்கள்/பெரியோர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் - கடும் நோய்களுக்கு நிவாரணம் 

பசு - இல்லத்தின் தோஷங்கள் - பலவித பூஜை பலன்கள் 

பழங்கள் - ஜீவன்களை வதைத்த சாபம் - ஆயுள் விருத்தி 

காய்கறிகள்- பித்ரு சாபங்கள் - குழந்தைகளின் ஆரோக்கிய மேம்பாடு 

அரிசி - பிறருக்கு கொடுக்காது தனித்து வாழ்ந்த சாபம் - வறுமை தீரும் 

எண்ணெய் - அறிந்தோ,அறியாமலோ சேர்ந்த கர்ம வினைகள் - கடன்கள் குறையும் 

பூ - அந்தஸ்து காரணமாக பிறரை அவமதித்து ஏற்பட்ட தீவினை - சுகம்,சாந்தமான குடும்ப வாழ்க்கை 

பொன் மாங்கல்யம் - மாங்கல்ய தோஷங்கள் - திருமணத் தடங்கல்கள் நீங்கும்.





மெய் அன்பர்களே.

அகத்தியர்வனம் மலேஷியா மற்றும் TUT( தேடல் உள்ள தேனீக்களாய்) இணைந்து வருகின்ற சனிக்கிழமை 
 (23/12/2017) மதியம் சுமார் 12 மணி அளவில்  வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அன்னதானம் செய்ய இறையருளும்,குருவருளும் கூட்டியுள்ளது. அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அன்னதானத்தில் 
உதவும் படி வேண்டுகின்றோம்.

இவண்,

அகத்தியர்வனம் மலேஷியா - http://agathiyarvanam.blogspot.in/
தேடல் உள்ள தேனீக்களாய் - tut-temple.blogspot.in
 
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்  

முந்தைய பதிவுகளுக்கு:-
 
 
செண்பகப்பொழில் தாயே போற்றி ! - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_13.html

 பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா - http://tut-temple.blogspot.in/2017/12/108.html 
  
குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_95.html 
 
அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_11.html
 
  மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html

பாம்பாட்டி சித்தர் பெருமைகள்... - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_62.html

பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html

அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(3) - http://tut-temple.blogspot.in/2017/12/3.html

 
 ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post.html


ஆலய(ன்ம) தரிசனம் எனும் அற்புத மருந்து - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_46.html

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/11/2.html

ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_28.html
திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html
சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html 

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.htmlநவராத்திரி - 4ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

 

 வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5) - http://tut-temple.blogspot.in/2017/11/5.html


வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4) - https://tut-temple.blogspot.in/2017/10/4.html
 
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-templ


 

No comments:

Post a Comment