Subscribe

BREAKING NEWS

27 April 2018

குன்றத்தூர் - கந்தழீஸ்வரர் பெருமான் திருக்கல்யாண வைபவம் அனைவரும் வருக! வருக !!

குன்றத்தூர்

குமரன் இருக்கும் இடம். சைவம், வைணவம் என பக்திக்கு பஞ்சம் இல்லாத ஊர். பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பிறந்த ஊர். இன்னும் என்னென்ன சிறப்புகள் இந்த குன்றத்தூருக்கு உண்டோ யாம் அறியோம் பராபரமே என்று தான் சொல்லத் தோன்றுகின்றது. நம் TUT தளத்திற்கும் குன்றத்தூருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

சரியாக ரைட்மந்த்ரா சுந்தர் அவர்களின் பிறந்த நாளில் ,சென்ற ஆண்டு அருள்மிகு நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் உழவாரப் பணி செய்தோம். இது நாம் திட்டமிட்டு செய்யவில்லை. இறையருளாலே நடைபெற்றது,

பணி நிறைவில் குன்றத்தூர் முருகன் தரிசனம், கந்தழீஸ்வரர் தரிசனம், சேக்கிழார் பெருமான் தரிசனம் என்று நமக்கு காண கிடைத்தது என்றால் அதுவும் அவன் அருளால் தானே.

இது மட்டுமா? சென்ற ஆண்டு கார்த்திகை தீப திருநாளை இங்கே சென்று கொண்டாடினோம். இன்னும் நெஞ்சுள் அந்த நினைவுகள் நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது. நம் தளம் சார்பாக இலுப்பை எண்ணெய் தீபமேற்ற அன்று வாங்கி கொடுத்துள்ளோம். இது போல் பல சேவைகள் நாம் வெளியே சொல்லாமல் செய்து வருகின்றோம். அனைத்தும் அவர் அறிவார் அன்றோ. மீண்டும் இந்த பதிவில் கந்தழீஸ்வரர் பற்றி கூறுகின்றோம்.

சேக்கிழார் பெருமான் வைகை நதிக்கரைத் தெய்வங்கள்,காவிரிக்கரை கடவுளர்கள் என தரிசித்து விட்டு, தொண்டை மண்டலம் வந்து சேர்ந்தார். இப்போதைய குன்றத்தூரில் உள்ள இறைவனை தரிசித்து விட்டு, அங்கேயே தங்கினார். தன்னை இழந்தார். சிவத்திடம் சரணாகதி அடைந்தார். சிவ பெருமான் ஒரு நாள் , அவருக்கு அற்புத தரிசனம் அளித்ததோடு, அவரிடம் இருந்த கர்வம்,செருக்கு போன்றவற்றை அழித்தார். கந்துதல் என்றால் பற்றுதல் என்று அர்த்தம். புகழ் ,பெயர் என பற்றிக் கொண்டிருந்த தனது பற்றுக்களை நீக்கியதால், இத்தல இறைவனுக்கு கந்தழீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. இதுவே இத்தலத்தின் புராதனம் ஆகும்.

அம்பாள் பெயர் இங்கே நகைமுகைவல்லி. சதுரவடிவ ஆவுடையாரில் பிரமாண்டமாக லிங்க திருமேனியராக சுவாமி அருள்பாலிப்பது சிறப்பு. சோழர் கால கோவில் இது. இந்தக் கோவிலுக்கு சற்று அருகில் தான் சேக்கிழாரின் அவதாரத் தலம் உள்ளது. இங்குள்ள அம்மனை வழிபட்டால் தமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கி.பி. 1241 ஆம் ஆண்டு, திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீராஜராஜனின் ஆட்சியில், இந்த ஆலயத்துக்குச் செய்த திருப்பணி விவரங்கள் கல்வெட்டில் உள்ளன. பல்லவ மன்னனும் ஸ்ரீகிருஷ்ண தேவராயரும் கூட இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர்.

பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, ரிஷபாரூடர்  போன்றோர் உள்ளனர். பிரகாரத்தின் சுவற்றில் தனது காலை லிங்கத்தின் மீது தூக்கி வைத்து தனது கண்ணை பிடுங்கும் கோலத்தில் கண்ணப்ப நாயனார் ஓவியம் உள்ளது. மலையடிவாரத்துக்கு அருகிலேயே கந்தனின் மாமனான திருமால், ஊரகப்பெருமாள என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டுள்ளார். அதையடுத்து சிவபெருமானின் கந்தழீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

தினமும் சேக்கிழார் வந்து வழிபட்டுள்ளார் என்று ஏற்கனவே சொல்லி இருக்கின்றோம். நாம் ஒவ்வொருவரும் ஆலய தரிசனம் செய்து வருகின்றோம், எத்தனையோ ஆலயங்கள் சென்று வந்தாலும், நம் வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் என்றால் நாம் சும்மா இருப்போமா? தினமும் சென்று தரிசனம் பெறுவோம் அல்லவா?  நாமும் ஆலய தரிசனத்தில் கூடுவாஞ்சேரியில் உள்ள வேலி அம்மன் தரிசனமும், மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள விநாயகர்,முருகர்,அகத்தியர் தரிசனமும் பெற்று வருகின்றோம்,  வாரத்தில் ஒரு நாளாவது கட்டாயம் இங்கு வந்து அருள் பெறுகின்றோம். அது போல் தான் கந்தழீஸ்வரர் ஆலயம்  சேக்கிழார்க்கு. அனு தினமும் அவர் வழிபட்ட ஆலயம். இதுவே இத்திருத்தலத்தின் சிறப்பு.



இத்தகு சிறப்புமிக்க ஆலயத்தில், வருகின்ற 29/04/2018 ஞாயிற்றுக் கிழமை  அன்று 
கந்தழீஸ்வரர் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற உள்ளது. அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு கந்தழீஸ்வரர் அருளை பெறும்படி அன்புடன் அழைக்கின்றோம். மேலும் விபரங்களுக்கு அழைப்பிதழை மேலே இணைத்துள்ளோம்.





முந்தைய பதிவுகளுக்கு :-

 அருள்மிகு கந்தழீஸ்வரரைப் பற்றுவோம் - அன்னாபிஷேகம் பதிவு - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post.html

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1) - http://tut-temple.blogspot.in/2017/12/1.html

மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - http://tut-temple.blogspot.in/2017/12/2_31.html

குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_95.html

பஞ்சு வாழ்க்கையில் இருந்து விடுபடலாமே - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_16.html

No comments:

Post a Comment