Subscribe

BREAKING NEWS

01 May 2018

வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம்


அடியார் பெருமக்களுக்கு,  

அன்பு கலந்த வணக்கம். தென்றல் தவிலும் தேனி மாவட்டத்தில் எண்ணற்ற கோயில்கள், மலைகள் உள்ளன. நாமும் தேனி என்றால் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் என்று மட்டுமே நினைத்து இருந்தோம். அம்மன் அருகிலேயே அருள்மிகு கண்ணீசுவரமுடையார் கோயில் இருக்கின்றது.எத்தனை பேர் இங்கு சென்று இருக்கின்றீர்கள் என்று நமக்குத் தெரியவில்லை. காரணம் எங்கு சென்றாலும் அவசரம். அதுவும் இது போன்ற கோயில்களுக்கு சென்றால் சொல்லவே வேண்டாம் அவ்வளவு அவசரம். சிவன் கோயிலில் உள்சென்று ஆகம விதிப்படி வழிபட்டு வெளியில் வர குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும். இத்தகைய வழிபாட்டில் தான் நாம் நம்மை அவனிடம் பூரண சரணாகதியாய் ஒப்படைகின்றோம். அப்போது தான் நாம் வேண்டியது கிடைக்கும். ஆனால் இன்று போகின்ற போக்கில் கன்னத்தில் போட்டுக் கொண்டு செல்கின்றோம். இதில் நாம் நினைப்பதை அவர் நிறைவேற்ற வில்லை என்று குறை வேறு கூறிக் கொள்கின்றோம்.

சரி..கன்னத்தில் போட்டுக் கொள்வதை நிறுத்த வேண்டாம். அடுத்த முறை கோயிலை கடந்து செல்லும் போது, திருக்கோயில் உள்ளே சென்று வழிபடுங்கள். அப்போது தான் உங்கள் மனக்கோயில் திறக்கும். தேனிக்கு மீண்டும் வருவோம். தேனியில் அடுத்து நாம் மிருகண்ட மகரிஷி மலைக்கு சென்றோம். அது ஒரு தனி அனுபவம். பதிவின் இறுதியில் மீண்டும் தருகின்றோம். இந்த பயணத்தில் தான் சின்னமனூரில் உள்ள பூலாநந்தீஸ்வரர் பற்றி அறிந்து தரிசித்தோம். அருகில் இருக்கின்ற மாணிக்கவாசகர் நம்மை எப்போது அழைப்பார் என்று காத்திருக்கின்றோம். என்னப்பா இது? இந்த நவீன யுகத்தில் காத்திருப்பா என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது. கையில் பணம் இருந்தால் நாம் விரும்பும் தரிசனம் பெற முடியுமா? முடியவே முடியாது..அப்படியானால் கையில் பணம்,உடலில் வலு மட்டும் போதாது. நம்மை அந்த எம் பெருமாள் அழைக்க வேண்டும்.அப்படி அழைத்தால் தான் நாம் தரிசிக்க முடியும்.

அது போன்ற ஒரு அனுபவமே இந்த சண்முகநாதன் தரிசனம். சுமார் இராண்டாண்டிற்கு முன்னதாகவே தேனியில் சண்முகநாத மலை இருப்பதாகவும் அங்கே குழந்தை முருகன் இருப்பதாகவும் கேள்விப்பட்டோம். எங்கே? எப்படி செல்வது என்று கேட்டால், என்னப்பா? தேனியில் இருக்கின்றாய்? இது தெரியாதா? என்பார்கள். அந்த முருகப் பெருமானை இணையத்தில் கண்ட போது, எப்போ அழைப்பாரோ? என்று தான் நமக்குத் தோன்றியது.




முருகன் அருள் முன்னிற்க அந்த நாளும் வந்தது. நம் சகோதரன்,சகோதரியோடு இம்முறை யாத்திரைக்கு சென்றோம். தேனியில் மாவட்டத்தில்  உள்ள கம்பம்  என்ற ஊருக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து காமய கவுண்டன் பட்டி .விளக்கமாக சொன்னால் கே.கே பட்டி என்ற ஊருக்கு செல்ல வேண்டும். அங்கு சென்று குருக்களை அழைப்பேசியில் அழைத்தோம்.


சிறிது நேரத்தில் அவர் வந்தார். பின்பு சுவாமிக்கு மலர் மாலைகள் வாங்கிவிட்டு, ஆட்டோ ஒன்று பேசி ஷண்முகநாத மலை  நோக்கி சென்றோம். நீங்கள் பார்த்து கொண்டிருப்பது மலை நோக்கிய பயணப் பாதை.




















இங்கு ஒரு நீர்த்தேக்கம் கட்டி உள்ளார்கள். ஒரு அணை முடிவு செய்து அதனை அப்படியே நீர்த்தேக்கமாக மாற்றி விட்டார்கள்.



எப்படியும் சுமார் 5 கி மீ மேலாக சென்று கொண்டிருந்தோம். நாம் எப்போது மலை யாத்திரை சென்றாலும் முதல் முறை செல்வது போல் தான் நமக்கு இருக்கும். இந்த முறை வெள்ளியங்கிரி இரண்டாம் தடவை சென்று வந்தோம், ,மனதளவில் முதல் முறையே. மலை எப்படி இருக்கும்? மலைப்பாதை எப்படி இருக்கும் என்று 1008 கேள்விகள் நம்முள் பாயும். இங்கும் அப்படிதான். ஆட்டோவில் சென்ற போது எடுத்த காட்சிகளே இங்கே இணைத்துள்ளோம்.






























நன்கு வெயில் வேறு. சுமார் 4 கி.மீ கடந்து இருப்போம். நீர்த்தேக்கம் தாண்டிய பின்பு பாதை பசுமையுள் பாய்ந்தது. என்னப்பா? எப்படி நடந்து செல்வது? கோயில் அருகிலேயே சென்று விடுவோமா? என்று சிந்தித்து கொண்டே நாம் சென்றோம்.


இடையில் இருந்த ஒரு வழிகாட்டிப் பதாகை


நமக்கு முன்னதாக ஒரு அடியார் கூட்டம் சென்று கொண்டிருக்கின்றார்கள்









இப்படியே சென்று கொண்டே இருந்தோம். பின்னர் சரியாக அடிவாரம் அடைந்தோம். அங்கே காவல் தெய்வம் கருப்ப சாமி இருந்தார். கொஞ்சம் மேல் நோக்கி ஏறினோம். கந்தனை, கடம்பனை,கதிர்வேலனை, அழகனை நெஞ்சார கண்டோம். வேலும் மயிலும் சேவலும் துணை என்று கன்னத்தில் ஒற்றிக் கொண்டோம்.


வேல் வழிபாடு மிக மிக முக்கியம். முருகன் வேறு, வேல் வேறு அல்ல..இரண்டும் ஒருவரே...குமரனைக் கண்டீர்களா? 

வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்

வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்

வெற்றி வேல் வீர வேல்

ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல்
ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல்
மோதி அந்த குன்றழித்த சக்தி வேல்
மோதி அந்த குன்றழித்த சக்தி வேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல்

வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்

வெற்றி வேல் வீர வேல்


தெய்வம் உண்டு தெய்வம் உண்டு
என்று சொல்லும் வெற்றி வேல்
தெய்வ பக்தி உள்ளவர்க்கு
கை கொடுக்கும் வீர வேல்
தெய்வம் உண்டு தெய்வம் உண்டு
என்று சொல்லும் வெற்றி வேல்
தெய்வ பக்தி உள்ளவர்க்கு
கை கொடுக்கும் வீர வேல்
எய்த பின்பு மீண்டும்
கந்தன் கையில் வந்து நின்ற வேல்
எய்த பின்பு மீண்டும்
கந்தன் கையில் வந்து நின்ற வேல்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
காணும் எங்கள் சக்தி வேல்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
காணும் எங்கள் சக்தி வேல்

வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்

வெற்றி வேல் வீர வேல்.

- சண்முகனிடம் சரணாகதி அடைவோம்.


முந்தைய பதிவுகளுக்கு :-

விளம்பியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temple.blogspot.in/2018/04/blog-post_14.html

பணசலாறு வீரப்ப ஐயனார் திருக்கோயில் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_6.html

அக ஒளி பெருக்கும் வீரபாண்டி கண்ணீசுவரமுடையார் - http://tut-temple.blogspot.in/2017/09/blog-post_13.html

இம்மாத மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_15.html

குழந்தை வரம் அருளும் ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - தொடர்ச்சி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_19.html

ஆடி மாத சிறப்பு தரிசனம் - வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_1.html

கேட்ட வரம் அருளும் வீரபாண்டி கௌமாரிஅம்மன் - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_60.html

கலையார் அரிகேசரியாய் போற்றி! போற்றி!! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_2.html


No comments:

Post a Comment