Subscribe

BREAKING NEWS

18 May 2018

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் !

வள்ளலார்

மிகப் பெரும் வாழும் சித்தர், மகான், வள்ளல். ஆன்மிகத்திற்கும் மட்டும் அல்ல..அறத்திற்கும் வள்ளல். ஆன்மிகமே அன்னதானத்தில் தான் அடங்கி இருக்கின்றது, ஒரு வேளை வயிற்றிற்கு சோறிடாது என்ன தான் ஆன்மிகம், அறம் என்று உபதேசித்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் தான். வள்ளலார் என்று சொன்னாலே அன்னதானம் தான் நம் கண் முன் நிற்கின்றது. எத்துணை எத்துணை சான்றோர் பெருமக்கள் இன்றும் அந்த அறப்பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள். வள்ளலாரும் அவர் தம் மார்க்கமும் பற்றி பேசுவது பெருங்கடலில் சென்று ஒரே ஒரு நீர்த்துளியை எடுத்து பருகுவது போன்றதாகும்.

நம் தேடல் உள்ள தேனீக்களாய் தளமும் கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயிலில் பலமுறை அன்னதானம் செய்துள்ளோம். அடுத்து வள்ளலார் சீடர்கள் பலரின் அறிமுகம் கிடைத்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சன்மார்க்க நேசன் திரு. M.A. ஹுசைன் ஐயா, வள்ளலார் மோகன் ஐயா, காந்திராஜன் ஜானகிராமன் ஐயா, கொளப்பாக்கம் சந்தானம் ஐயா, தயவு சித்தாஸ்ரமம் திரு.சரவணன் ஐயா  என அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்களில் ஒவ்வொருவரின் சேவை,தொண்டு பற்றி நேரில் சென்று அளவளாவி தனிப் பதிவாகவே அளிக்கலாம். சிலரை நம் தளத்தில் பதிவிட்டு இருக்கின்றோம். குறிப்பாக சன்மார்க்க நேசன் திரு. M.A. ஹுசைன் ஐயா பற்றியும், தயவு சித்தாஸ்ரமம் திரு.சரவணன் ஐயா பற்றியும் தொட்டுக் காட்டி இருக்கின்றோம்.  மேலும் கூடுவாஞ்சேரி வள்ளலார் சன்மார்க்க சபை மாதந்தோறும் அன்னதானத்தோடு, கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் பூச நட்சத்திர பூசையும் செய்து வருகின்றார்கள். நாம் சென்ற மாத பூசையில் அகவல் பாராயணம் செய்து விட்டு கிளம்பினோம். அந்த ஆசைகளே. இந்த பதிவை படைக்க நமக்கு வழிகாட்டுகின்றது. இந்த பதிவில் வள்ளலாரின் சன்மார்க்கம் குறித்தும், வள்ளலாரின் சன்மார்க்க அன்பர்கள் தொடர்பு குறித்தும் சொல்ல இருக்கின்றோம்.


அருட்பெருஞ்சோதி ஆண்டவரை ஆராதனை செய்தவர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என முழங்கியவர். அந்த முழக்கமே வடலூரில் சத்திய தரும சாலையாய் இன்றும் பசிப்பிணி தீர்த்து வருகின்றது. அவர் பிறப்பு முதல் எத்தனை எத்துனை சம்பவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. வள்ளலார் நமக்கு எப்படி தெரிகின்றார் ? ஆன்மிகவாதி மட்டும் என்றால் அது மேலோட்டமாக உணர்வதே.

சிறந்த சொற்பொழிவாளர்,போதகாசிரியர்,உரையாசிரியர்,சித்தமருத்துவர்,பசிப் பிணி போக்கிய அருளாளர்,பதிப்பாசிரியர்,நூலாசிரியர்,இதழாசிரியர்,இறையன்பர்,ஞானாசிரியர்,அருளாசிரியர்,
சமூக சீர்திருத்தவாதி,தீர்க்கதரிசி,மொழி ஆய்வாளர் (தமிழ்) என்றெல்லாம் உணர்த்தப்பட்டு வருகின்றார்.இதெல்லாம் சாதாரண மானிடனுக்கு வாய்க்குமா? ஞானிகளுக்கு வாய்க்குமா?




சன்மார்க்கம் கூறும் செய்திகளை மேலே இணைத்துளோம். ஒரு தடவை படித்தால் புரியாது. ஓராயிரம் தடவை படித்தால் தான் உணர்ந்து நாம் கைக்கொள்ள முடியும். அடுத்து வள்ளலார் என்று சொன்னால் நம் நினைவிற்கு வருவது திருஅருட்பா. நமக்கு என்று வாய்க்கும் என்று தெரியவில்லை. உணர்ந்தபின் இங்கே அறிய தருகின்றோம்.




திருஅருட்பா செய்திகளையும் இங்கே மேலே இணைத்துள்ளோம்.  அடுத்து வள்ளலாரின் வழியில் சைவம் பற்றிய கருத்துக்களை பகிர்கின்றோம்.







அசைவம் சாப்பிடுபவர்கள் உடனே என்ன செய்வது என்று  நினைக்க வேண்டாம்? நீங்கள் உங்கள் விருப்பத்தில் நிலை பெறுங்கள். உங்கள் உள்ளுணர்வில் உயிர்ப்பெறுங்கள். அசைவம் பிடித்தால் உண்ணுங்கள். சைவத்திற்கு மாற முயற்சிக்க வேண்டாம். உங்கள் விருப்பம் சரியாக இருந்தால் அந்த மாற்றம் தங்களுக்கு கிடைக்கும். நாமும் அசைவத்தில் ஒரு பிடி பிடித்த காலமுண்டு. கூடுவாஞ்சேரி வந்த பின் நமக்கு தானாகவே சைவத்தில் நிலைப்பாடு ஏற்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உணவில் சைவம் மட்டுமே பின்பற்றி வருகின்றோம். இது எம் குருவின் ஆளுமையே. வள்ளலார் வழி வந்த வேதாத்திரி மகரிஷியின் அருளே நம்மை இன்னும் உயிர்ப்பித்து வைத்துக் கொண்டிருக்கின்றது.

மேற்கொண்டு வள்ளலார் பேசும் தொடர்புகளை இங்கே தருகின்றோம். வாய்ப்புள்ள அன்பர்கள் பயன்படுத்தி கொள்ளவும்.









அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!!

இதோ வள்ளலாரின் அருளாணைப்படி நேற்று கூடுவாஞ்சேரி அகத்தியர் கோயிலில் தூங்கா தீபம் ஏற்றியுள்ளோம்.







- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக :-

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018 - http://tut-temple.blogspot.in/2018/05/21052018.html

திருஅருட்பா அமுது உண்போம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_23.html


மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html


No comments:

Post a Comment